Jailer: “ `ஜெயிலர்’ படத்தின் சிறப்புக் காட்சி ரத்து!” – உண்மையை விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

Jailer: “ `ஜெயிலர்’ படத்தின் சிறப்புக் காட்சி ரத்து!” – உண்மையை விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

  • Cinema
  • August 3, 2023
  • No Comment
  • 25

சமீபத்தில் ஒரு பட ரிலீஸின்போது, ஒரு ரசிகர் இறந்து போனதும் நினைவிருக்கலாம். இப்படி அதிகாலை 4 மணி, 6 மணி சிறப்புக் காட்சிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நிறையவே ஏற்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி காந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ‘ஜெயிலர்’. இம்மாதம் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

அதிகாலை சிறப்புக் காட்சியாக ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சிறப்புக் காட்சி இல்லை என்றும், முதல் காட்சியே காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது என்றும் திரையரங்குகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பூர் சுப்ரமணியம்.

இதற்கு முன்பு வெளியான ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் இருந்தன. அதே சமயம், ‘பொன்னியின் செல்வன்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ போன்ற பெரிய படங்களுக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால் ‘ஜெயிலர்’ படமும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது என்கிறார்கள்.

சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன்.

 

`அரசு அனுமதி அளித்துள்ள காட்சிகளின் நேரம் என்பது காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரைதான் பல வருடங்களாக இருந்து வரும் நடைமுறை. அதன்படிதான் திரையிட்டு வருகிறோம். ஒருசில படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் இருந்தபோது, ரசிகர்கள் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில் ஒரு பட ரிலீஸின்போது, ஒரு ரசிகர் இறந்து போனதும் நினைவிருக்கலாம். இப்படி அதிகாலை 4 மணி, 6 மணி சிறப்புக் காட்சிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நிறையவே ஏற்படுகிறது.

அதனால்தான் நாங்களே முடிவெடுத்து சில படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் இல்லாமல் 9 மணி காட்சியில் இருந்து ஆரம்பித்தோம். தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதைப் போல ‘ஜெயிலர்’ படத்துக்கு சிறப்புக் காட்சிகள் இல்லை என்பது தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் எடுத்த முடிவு அல்ல. தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசி, இருதரப்பினருமே எடுத்த முடிவு. பண்டிகை காலங்களில் சிறப்புக் காட்சிகள் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. அதை அரசுதான் முடிவெடுக்கும்” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.

 
 

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply