வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் சிங்களவர்களின் தலைநகரில் ஏன் தங்கியுள்ளீர்..! கம்மன்பில சீற்றம்

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் சிங்களவர்களின் தலைநகரில் ஏன் தங்கியுள்ளீர்..! கம்மன்பில சீற்றம்

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 15

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று கூறித் திரியும் தமிழ் அரசியல்வாதிகள் கொழும்பில் ஏன் தங்கியுள்ளார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வினவியுள்ளார்.

அத்துடன் கொழும்பு சிங்களவர்களின் தலைநகர் என்று அவர்களுக்குத் தெரியாதா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது.

தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் முயற்சி
வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், வடக்கு – கிழக்கில் மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள்.இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வடக்கு – கிழக்கில் விகாரைகளை நிறுவுதல் பௌத்த மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டமை இந்து மயமாக்கலா?

வடக்கு – கிழக்கில் சிங்களவர்கள் குடியேறுதல் சிங்கள மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் தமிழர்கள் குடியமர்ந்துள்ளமை தமிழர் மயமாக்கலா? தமிழ் அரசியல்வாதிகள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply