கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் மீண்டும் நேரடி விமானச் சேவை

கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் மீண்டும் நேரடி விமானச் சேவை

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 71

கொழும்பிற்கும், கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவையை  மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கான பிராந்திய மேலாளர் வி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்கா ஏர்லைன்ஸ் தகவல்

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறிலங்கா ஏர்லைன்ஸ் 2017இல் இருந்து 2020 வரை, கொழும்பு – கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு இடையில் மூன்று நேரடி விமானங்களை இயக்கியது.எனினும் கோவிட் தொற்று காரணமாக அது நிறுத்தப்பட்டது. பின்னர் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை.

இதேவேளை இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் 9 நகரங்களுக்கு ஏற்கனவே இணைப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி கொல்கத்தாவில் இருந்து நேரடி சேவைகளை மீண்டும் தொடங்குவது தங்களின் செயல்திட்டத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply