சர்வதேச மாணவர்களை குறிவைக்கும் கனடா: கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்

சர்வதேச மாணவர்களை குறிவைக்கும் கனடா: கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்

  • world
  • August 23, 2023
  • No Comment
  • 70

சர்வதேச மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் இல்லாமல், தங்கள் லாபத்துக்காக ஏராளமான மாணவர்களை கனடாவுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முன்னாள் புலம்பெயர்தல் அமைச்சரும், உட்கட்டமைப்புத்துறை அமைச்சருமான Sean Fraser திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்வதினால் அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என கருத்து நிலவி வருகிறது.

கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா அரசு திட்டமிட்டுவருகிறது.வீடுகள் பற்றாக்குறை
கடந்த மாதம் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உட்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார்.

அதற்கு இவர் எடுத்துள்ள ஆயுதம், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்துவது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் நாட்களில் சர்வதேச மாணவர்கள் கனடா வருவதற்கு சிக்கல்கள் அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.a

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply