• August 9, 2023
  • No Comment
  • 103

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் கனடா அமல்படுத்திய புதிய நடைமுறையை

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் கனடா அமல்படுத்திய புதிய நடைமுறையை

பல நாடுகளில் புகையிலை, மது மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களின் மீது அது தொடர்பான எச்சரிக்கை வாசகம் அச்சடிக்கப்படுவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதே போன்று பல பொருள்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.

 

இந்நிலையில், சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நலத் தீங்கு குறித்த பல எச்சரிக்கை வாசகங்களை, ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒன்று என்ற வகையில் அச்சடிக்கும் கொள்கை ரீதியிலான முடிவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது கனடா.

இதுதொடர்பாக கொள்கை ரீதியான முடிவை கனடா அரசு கடந்த ஆண்டு எடுத்தது. நடப்பு ஆண்டில் பிற்பாதியில் இது செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகத்தை அச்சிட்டு விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

 

இது பற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதை அடிமையாதல் துறைக்கான அமைச்சர் கரோலின் பென்னட் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புகையிலை பொருள்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply