மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் – ஹசரலி பெர்னாண்டோ.
- healthy
- October 10, 2023
- No Comment
- 12
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனை முழுமையாக குணப்படுத்தலாம் என தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதற்காக நிறுவப்பட்டிருக்கும் நிலையங்களுக்கு மேலதிகமாக 30 புற்றுநோய் சிகிச்சை நிலையங்களை புதிதாக ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘101 கலந்துரையாடல்’ நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களே 80 சதவீதம் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், 30 வயதுக்கு முன்பு குழந்தை பெற்றிருக்காதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதத்திலும் உரிய தினத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுயமாக புற்றுநோய் பரிசோதனையை செய்துகொள்வது சிறந்ததாகும் என வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோய் தொடர்பிலான சுய பரிசோதனைகளை செய்துகொள்ளும் போது, வலியுடன் கட்டிகள், தோல் தடிப்பு, நிறம் மாறல், தோற்றத்தில் மாற்றம், மார்பகங்களில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் உள்ளிட்ட மாற்றங்களை விரைவில் அறிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேலதிகமாக, நாரஹேன்பிட்டி, இரத்தினபுரி,மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் 05 புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021