Asian Games: தடைகளை மீறி ஆசியப் போட்டிக்குள் நுழையும் இந்திய கால்பந்து அணி! – சாத்தியமானது எப்படி?

Asian Games: தடைகளை மீறி ஆசியப் போட்டிக்குள் நுழையும் இந்திய கால்பந்து அணி! – சாத்தியமானது எப்படி?

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 106

ஆசியப் போட்டிகள் 2023-ல் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி இடம் பெறாது என்ற சூழல் நிலவிய நிலையில் இப்போது அந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?

ஆசியப் போட்டிகள் 2023-யில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி இடம் பெறாது என்ற சூழல் நிலவிய நிலையில் இப்போது அந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?

இந்திய ஆடவர் கால்பந்து அணி 18-ஆவது இடத்திலும் மகளிர் அணி 11-ஆவது இடத்தில் இருப்பதால், இந்திய அணியால் ஆசியப் போட்டிகளில் விளையாட முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் அந்த அணியினர் மட்டும் இல்லை இந்திய கால்பந்து ரசிகர்களிடமும் இருந்தது.

Stimac-coach

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக், பிரதமர் மோடிக்கு எழுதிய கடித்ததில் அவர் “ஒரு திறமைவாய்ந்த அணி இந்தியா கொடியுடன் விளையாட மறுக்கபடுவது ஏன்?” எனக் குறிப்பிட்டு அணியை ஆசிய போட்டிகளில் ஆட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அவர் கூறியதாவது “ஆசியப் போட்டிகள் முக்கியமானது, எவ்வளவு சர்வதேச போட்டிகள் விளையாடுகிறோமோ அவ்வளவு முன்னேற்றத்தை இந்திய அணி காணும்”. எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பலதரப்பு கோரிக்கைகளுக்குப் பிறகு, இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் வருகின்ற ஆசியப் போட்டிகள் 2023-ல் விளையாடும் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். அவரது அறிக்கையில் “தற்போதுள்ள அளவுகோலின்படி தகுதி பெறாத இரு அணிகளுமே பங்கேற்பதற்கு வசதியாக இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீபத்திய காலங்களில் அவர்களின் செயல்பாடுகளை மனதில் கொண்டு, தளர்வு வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது” எனக் குறிபிட்டுள்ளார்.

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியது மட்டும் இல்லாமல், “இந்த ஆசியப் போட்டிகளில் சீனா மிகவும் கடினமான போட்டியாளர்களாக இருப்பர் என்றும் வங்காளதேசமும் இந்தியாவும் சமமான போட்டியர்கள்தான். உலகக்கோப்பை தகுதிச்சுற்று எங்களுக்கு அதிர்ஷ்டமாக இல்லை ஏன் என்றால் எங்களுடன் போட்டிப்போட ஆசியாவில் சிறந்த அணியான கத்தார் இருக்கிறது மேலும் குவைத் இருக்கிறது, இந்தியா கண்டிப்பாக இரண்டாம் இடம் பிடிக்கும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவிதுள்ளார்.

ஆசியப் போட்டிக்கு இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி தேர்வாகி இருப்பது இந்தியா கால்பந்து ரசிகர்களை மகிழச்சியில் ஆழ்த்தியுள்ளன.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply