இந்திய சுதந்திர தினத்தை தேசிய கொண்டாட்டமாக அமெரிக்கா அறிவிப்பு

இந்திய சுதந்திர தினத்தை தேசிய கொண்டாட்டமாக அமெரிக்கா அறிவிப்பு

  • world
  • August 15, 2023
  • No Comment
  • 23

ஆகஸ்ட் 15 ஆம் திகதியை இந்திய தேசிய கொண்டாட்ட தினமாக அறிவிக்க அமெரிக்க மாளிகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்திய சுதந்திர தினத்தை உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் தேசிய கொண்டாட்ட நாளாக அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதல்
இந்தத் தீர்மானத்திற்கு இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீ தானேதர் தலைமை தாங்குகிறார்.

ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றிய இரு நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை, உலக ஜனநாயகத்தை தொடர்ந்து முன்னேற்றுவதோடு, அனைத்து நாடுகளுக்கும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமையை வளர்க்கும் என்ற நம்பிக்கையை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துகிறது.

ஜூன் 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் அரசுப் பயணம், ஜனநாயகம், பன்மைத்துவம், சுதந்திரம், மரியாதை ஆகியவற்றுக்கான பொதுவான நலன்கள் மற்றும் பகிரப்பட்ட கடப்பாடுகளின் அடிப்படையில் நாடுகளுக்கிடையே புதிய நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்தது.

 

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply