அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல்! சிசிடிவி கமராவில் பதிவான காட்சி

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல்! சிசிடிவி கமராவில் பதிவான காட்சி

அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பமொன்று வசிக்கும் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கீஸ்பரோ பகுதியில் உள்ள இலங்கை குடும்பம் வாழும் வீட்டின் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளமை சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர் கைது

இதன்போது தாக்குதல்தாரிகள் கருப்பு உடை அணிந்து, கூர்மையான ஆயுதங்களுடன் வந்து அச்சுறுத்திய நிலையில் தாக்குதலை எதிர்கொண்ட இலங்கையர் உடனடியாக அவர்களுக்கு பதிலளித்துள்ளமையும் பதிவாகியுள்ளது.மேலும், தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களின் முக்கிய நோக்கம் காரை கடத்தி செல்வதாக இருக்கலாம் என  சம்பவத்தை எதிர்கொண்ட இலங்கையர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார.

தற்போது, சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய குழுவைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply