அழகு பற்றி பதிவிட்ட எமி ஜாக்சன்   – வைரலாகும் எமி ஜாக்சனின் போட்டோ சூட் !

அழகு பற்றி பதிவிட்ட எமி ஜாக்சன் – வைரலாகும் எமி ஜாக்சனின் போட்டோ சூட் !

  • Cinema
  • October 2, 2023
  • No Comment
  • 59

இன்ஸ்டா பக்கத்தில் எமி ஜாக்சன் பகிர்ந்த படங்களைக் கண்ட நெட்டிசன்கள் `எமி ஜாக்சனா இது’, `என்னதான் ஆச்சு எமிக்கு’ போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

`மதராசப்பட்டினம்’, `ஐ’ படங்களில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எமி ஜாக்சன்.

2017-ல் வெளியான `சூப்பர்கேர்ள்’ என்ற ஹாலிவுட் சீரிஸில் `இம்ரா ஆர்டீன்’ என்ற கதாபாத்திரத்தில் எமி நடித்திருந்தார். ஆனால் தொடர்ச்சியாக வந்த சில படங்கள் இவருக்குகைகொடுக்காததால், நீண்ட நாள்களாக திரைத்துறையை விட்டு விலகி இருக்கிறார்.

இவர் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார். அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் எமி ஜாக்சன் பகிர்ந்த அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களைக் கண்ட நெட்டிசன்கள் `எமி ஜாக்சனா இது’, `என்னதான் ஆச்சு எமிக்கு’ போன்ற கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சிவப்பு நிற உடையில் இருக்கும் எமி, பாய்ஸ் ஹேர் கட் செய்தது போல தோற்றமளிக்கிறார். இந்தத் தோற்றம் அச்சு அசலாக `Peaky Blinders” சீரிஸில் வரும் சிலியன் மர்பி நடித்த `தாமஸ் ஷெல்பி’ கதாபாத்திரத்தை போலவே இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் எமியின் தோற்றத்தைக் குறித்து பலரும் நையாண்டி செய்யும் நிலையில், எமிக்கு ஆதரவாகவும் கருத்துகள் பெருகி வருகின்றன.

“நீங்கள் கண்டு ரசித்த ஒருபெண் எப்போதும் உங்கள் கற்பனையைப் பூர்த்தி செய்யும் வகையில் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அந்த எண்ணம் தவறு. அவரின் ஒப்பனை அவருடைய தனிப்பட்ட உரிமை” என சோஷியல் மீடியாவில் ஆதரவுகள் பெருகி வருகின்றன.

எமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்கையில் சில படங்கள் மட்டுமே இந்த ஒப்பனையில் இருக்கின்றன. மற்ற புகைப்படங்களில் அவர் இயல்பான தோற்றத்திலேயே காட்சியளிக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply