துபாய் செல்லும் மாணவிகளை தடுத்து நிறுத்திய தலிபான்கள்

துபாய் செல்லும் மாணவிகளை தடுத்து நிறுத்திய தலிபான்கள்

  • world
  • August 28, 2023
  • No Comment
  • 57

உயர்கல்விக்கான உதவித்தொகை பெற்று துபாய்க்கு புறப்பட்ட 100 மாணவிகளை தலிபான் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை மூலம் அனுமதி பெற்றவர்களுக்கு பயணம் செய்ய தாலிபான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அல்ஹப்தூர் குழுமத்தின் நிறுவனர் தலைவரான கலாஃப் அஹ்மத் அல் ஹப்தூர் (Khalaf Ahmad Al Habtoor) மாணவர்களின் கல்வி, தங்குமிடம், பயணம் மற்றும் உடல்நலக் காப்பீட்டிற்கு நிதியுதவிகளை செய்துள்ளார்.

பெண்களுக்கான கல்வித்தடை
இந்நிலையில், மாணவிகள் கைது செய்யப்பட்டதற்கு அவர் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்நிலைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்விக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு, பலர் வெளிநாடுகளில் உயர் கல்வியை நாடியுள்ளனர்.ஆனால், கணவர், தந்தை, சகோதரர் போன்ற ஆண்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் பெண்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, பயண மறுப்பு குறித்து தலிபான் நிர்வாகம் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply