ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி – ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா

  • local
  • May 13, 2025
  • No Comment
  • 50

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி – ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா

வட்ட மேசை மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும் போது ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்றும் அவ்வாறான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படுமாயின் அது இரு நாடுகளுக்குமான நன்மைகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…