இரவு நகராக மாறவிருக்கும் காலி!

இரவு நகராக மாறவிருக்கும் காலி!

  • local
  • August 3, 2023
  • No Comment
  • 65

காலி வர்த்தக சம்மேளனமும் காலி மாவட்ட செயலகமும் இணைந்து புதிய செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,  காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹேமந்த கமகே காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்

இதன் கீழ் இம்மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் காலி கோட்டை பாலதக்ஷ மாவத்தையை அண்மித்த பகுதியில் இரவு நகரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காலி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

காலி கோட்டையை அண்டிய பகுதிகளில் இரவில் தங்கி பொருட்களை வாங்குதல், அதிக இன்பம், பொழுதுபோக்கு, உள்ளூர் உணவு மற்றும் பானங்கள் என பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டங்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் காலி நகருக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹேமந்த கமகே சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், காலியை பரபரப்பான வர்த்தக நகரமாக மாற்றுவதே தமது நம்பிக்கை என காலி வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் மகேந்திர லியனகே தெரிவித்துள்ளார்.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply