திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும்  20 பேரை கைது செய்ய நடவடிக்கை -அமைச்சர் ஆனந்த விஜேபால

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 20 பேரை கைது செய்ய நடவடிக்கை -அமைச்சர் ஆனந்த விஜேபால

  • local
  • May 23, 2025
  • No Comment
  • 79

​திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குழுக்களை சேர்ந்த 20 பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் ஏற்கனவே சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

குறித்த 20 பேரும் தலைமறைவாகியுள்ள நாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்த 11 பேர் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…