சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு
- Sportsworld
- June 2, 2025
- No Comment
- 58
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைகளை வெல்ல உதவினார் .
இதுவரை 149 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள அவர், 126.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3,990 ரன்களை விளாசியுள்ளார். இதில் 23 அரைசதங்களும் அடங்கும். கடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக காலில் காயம் ஏற்பட்ட போதிலும் 201 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது மேக்ஸ்வெல்லின் சிறந்த ஆட்டமாக இருக்கும்.
இவ்வாறான சிறந்த வீரரான க்ளென் மேக்ஸ்வெல் 50 ஓவர் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் இருபதுக்கு இருபது போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார்.