ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

  • world
  • August 14, 2023
  • No Comment
  • 83

ஹவாய் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹவாயில் காட்டுதீயினால் முற்றாக அழிவடைந்துபோன லகையினா பிரதேச மக்கள் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இழப்புகள் குறித்த விபரங்களை அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஹவாயின் சில பகுதிகளில் ஊரடங்கு
மேலும், தங்கள் ஆடைகளுடன் அந்த பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் தாங்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவேண்டிய நிலையேற்படலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்தவாரம் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம் முற்றாக அழிவடைந்துள்ளது.

இந்நிலையில் ஹவாயின் சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள அதேவேளை மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அந்த பகுதிகளிற்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

லகைனா நகரில் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்தும் மின்சாரமும் நீரும் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீச்சம்பவத்தின் பின்னர் கரையோர பொலிஸார் நகரின் துறைமுக பகுதியில் நீரிலிருந்து 17 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply