“13” குறித்த ரணிலின் உரைக்கு உரிய நேரத்தில் பதில்! சம்பந்தன் திட்டவட்டம்

“13” குறித்த ரணிலின் உரைக்கு உரிய நேரத்தில் பதில்! சம்பந்தன் திட்டவட்டம்

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 73

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரைக்கு உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டுப் பதிலளிக்க விரும்பவில்லை.

13ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு இந்த நாட்டின் அதியுயர் சட்டமாகும். அதை நாம் புறக்கணிக்க முடியாது.நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நிறைவேற்று அதிகாரமும், நாடாளுமன்றமும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09.08.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

இந்திய பிரதமருக்கு தெளிவான கடிதம்

13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்து விசேட உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் இன்று (09.08.2023) இரவு வினவியபோது,அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் எமது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அவர் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் எழுதிய கடிதத்திலும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.ஜனாதிபதியின் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் பதில் வழங்குவேன். என்று குறிப்பிட்டுள்ளார்

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply