NPP  எதிரான குழுக்களுடன்   இணைந்து  தொழிற்பட  தீர்மானம் – ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை

NPP எதிரான குழுக்களுடன் இணைந்து தொழிற்பட தீர்மானம் – ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை

  • local
  • May 15, 2025
  • No Comment
  • 60

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கின்ற அனைத்து குழுக்களுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை வௌியிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலின்போதே ரணில் விக்கிரமசிங்க இத்தீர்மானம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நலீன் பண்டார கலந்துகொண்டிருந்தார்.

 

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலுள்ள பல உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

 

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பெயர்ப்பட்டியலை தயாரிப்பதற்காக குறித்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று(15) சந்திக்கவுள்ளனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…