கொழும்பை அச்சுறுத்தும் தொழுநோய்

கொழும்பை அச்சுறுத்தும் தொழுநோய்

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 63

கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பிரதேசத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்

கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 127 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி, மஞ்சுளா திலகரத்ன தெரிவிக்கையில், மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்தம் சுமார் 120 தொழுநோய்கள் பதிவாகின்றன.

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மொரட்டுவையில் 51 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உள்ளதாகவும் மஞ்சுளா திலகரத்ன தெரிவித்தார்.


Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply