காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

  • world
  • October 31, 2023
  • No Comment
  • 74

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 முதல், காசாவில் குறைந்தது 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.

இதில் மேற்குக் கரையில் 33 மற்றும் இஸ்ரேலில் 29 உட்பட மொத்தமாக 3,257 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் மூன்று வாரங்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு வருடம் முழுவதும், உலகளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் – ஆயுத மோதலில் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

காசாவில் உயிரிழந்த 7,703 பேரில் 40% க்கும் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசம் மற்றும் இஸ்ரேலில் உள்ள மொத்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள். காசாவில் மேலும் 1,000 குழந்தைகள் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாகக் கருதப்படுவதால், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என மேலும் தெரிவிக்க படுகிறது.

காசாவில் குறைந்தது 6,360 குழந்தைகளும், மேற்குக் கரையில் குறைந்தது 180 குழந்தைகளும், இஸ்ரேலில் குறைந்தது 74 குழந்தைகளும் காயமடைந்துள்ளதாக save the children அமைப்பு தெரிவிக்கிறது.

picture credit : istockphoto.com

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply