சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்! குவியும் பாராட்டுக்கள்

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்! குவியும் பாராட்டுக்கள்

  • world
  • August 24, 2023
  • No Comment
  • 65

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் உள்ளடங்களாக மூன்று வேட்பாளர்கள் போட்டியிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் இங் கொக் சாங், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதுடன் அன்றையதினம் அந்நாட்டு பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணியமான போட்டி
போட்டியில் பங்குபற்றும் தமிழர் ஒருவர் உட்பட மூவரும் நேற்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதன்போது வேட்ப்பாளர்களுக்கு மக்களிடம் உரையாட இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.அங்கு கருத்து தெரிவித்த தர்மன் சண்முகரட்ணம்,கண்ணியமான போட்டி, நியாயமான பிரச்சாரம் என்பவற்றுடன் முழு மனதுடன் சிங்கப்பூர் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நமது எதிர்காலம் மேலும் கடினமானதாகவும் சவாலானதாகவும் இருக்கப்போகிறது. அதனால் பல ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவங்களையும் திறன்களையும் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற இந்த போட்டியில் களமிறங்கியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply