உக்ரைன்-ரஷ்ய போரில் தீவிரமடையும் தாக்குதல்கள்! ஒரே இரவில் பலர் பலி

உக்ரைன்-ரஷ்ய போரில் தீவிரமடையும் தாக்குதல்கள்! ஒரே இரவில் பலர் பலி

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 75

கருங்கடலில் ரஷ்ய டேங்கர் மீது கிவ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

ஒரே இரவில் தீவிர வான்வழி தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் உக்ரைனில் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து, சீனா,இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட 40 நாடுகளின் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சனிக்கிழமை மாலை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்
இதேவேளை கிழக்கு நகரமான Kupiansk இல் இடம்பெற்ற இரத்த மையத்தின் மீதான தாக்குதலுக்கு உக்ரைனிய அதிகாரிகள் ரஷ்யாவை குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் மாஸ்கோவில் கடமையிலுள்ள அதிகாரிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Donetsk பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார்கள்.கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள குபியன்ஸ்க் மீதான தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்துள்ளார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply