2026-ல் AI துறையில் முக்கிய இடம் பிடிக்கும் Apple நிறுவனம்
- Technology
- December 31, 2025
- No Comment
- 26
2026-ல் Apple நிறுவனம் AI துறையில் முன்னிலை பெறவுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது.
Apple நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக AI துறையில் போட்டியாளர்களை விட பின்தங்கியிருந்தது.
2024-ல் WWDC மாநாட்டில் Apple Intelligence என்ற பெயரில் AI அம்சங்களை அறிமுகப்படுத்தினாலும், அவை பெரும்பாலும் Writing Tools, Image Playground, Clean Up, Genmoji போன்ற அடிப்படை அம்சங்களாகவே கருதப்பட்டன. மேலும், AI Notification Summaries அம்சம் பிழைகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
2025 முழுவதும் Apple, AI-யில் பெரிய முன்னேற்றம் எடுக்க முடியாமல் இருந்தது.
ஆனால், The Information வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2026-ல் Apple தனது AI பயணத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முக்கிய காரணங்களாக Private Cloud Compute (PCC) மற்றும் NPU-enabled chipsets மூலம் வலுவான AI அடித்தளத்தை Apple உருவாக்கியமை ,
OpenAI-க்கு அப்பால், Anthropic மற்றும் Google போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றமை , மற்றும் Apple-ன் AI ஆராய்ச்சி குழு பல்வேறு புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளமை ஆகிய காரணங்கள் குறிப்பிடப்படுகிறது .