திடீரென பதவி விலகிய அரசின் முக்கிய துறையின் தலைவர்

திடீரென பதவி விலகிய அரசின் முக்கிய துறையின் தலைவர்

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 16

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை அவர் இன்று(15.08.2023) அறிவித்துள்ளார்.

இதேவேளை பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தணிக்கும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக, நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக பல உதவி திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

பொருளாதார உதவி
இதற்கமைய நாட்டு மக்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கக்கூடிய அரசின் முக்கிய துறையின் ஓர் அம்சமாக நலன்புரி நன்மைகள் சபை காணப்படுகின்றது.

மேலும் நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்த்து மக்களுக்கு உதவும் வகையில் ஜனாதிபதியினால் அண்மையில்’அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply