19  வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் –  இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் – இலங்கை குழு

  • Sports
  • January 2, 2026
  • No Comment
  • 16

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நமீபியா மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளில்நடைபெறவுள்ள இந்தத் தொடருக்காக, கொழும்பு ரோயல் கல்லூரியின் நட்சத்திர வீரர் விமத் தின்சார தலைவராகவும் உப தலைவராக கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியின் கவிஜ கமகே செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இவருடன் விக்னேஸ்வரன் ஆகாஷ் (சென்.ஜோசப் கல்லூரி,மருதானை) மற்றும் ஜீவந்த ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி,கொழும்பு) ஆகியோரும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர, திமந்த மஹவிதான, விரான் சமுதித்த, துல்நித் சிகேரா, சாமிக ஹீந்திகல, ஆதம் ஹில்மி, சமரிந்து நெத்சர, செத்மிக செனவிரத்ன, ராசித் நிம்சர, செனுஜ வேகூனகொட, மலிந்த சில்வா ஆகியோரும் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அணி உலகக் கிண்ணத் தொடருக்கான ஆயத்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவும், அந்நாட்டுக் காலநிலைக்கு ஏற்றவாறு தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்காகவும் இலங்கை அணி நேற்று நமீபியா நோக்கிப் புறப்பட்டது.

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…