முள்ளிவாய்க்கால் நினைவின் 16 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று

முள்ளிவாய்க்கால் நினைவின் 16 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று

  • local
  • May 18, 2025
  • No Comment
  • 56

ஈழத்தில் யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும்

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று(18) நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக்கஞ்சியும் வழங்கப்பட்ட்து .

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நடைபெறுகின்றது.

அதற்கமைய காலை 10.15 அளவில் முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு, 10.29க்கு மணி ஒலி எழுப்பப்பட்டது.

இதனையடுத்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், அதன் பின்னர் நினைவேந்தலில் பங்கேற்றவர்களால் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…