முல்லைத்தீவில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கிவைப்பு

முல்லைத்தீவில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கிவைப்பு

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 111

வடமாகாணத்தில் பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான நிர்மானப் பணிகள் நிறைவுச் செய்ப்பட்டு நேற்று (03.08.23)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு,கற்ச்சிலைமடு,காதலியார் சம்மளங்குளம்,ஒலுமடு ஆகிய கிராமங்களிற்கு சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

குடி நீர் பிரச்சனைக்கு தீர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவில் சிறுநீரக நோயாளர்கள் காணப்படும் நிலையில் வடக்கில் முல்லைத்தீவு,கிளிநொச்சி,வவுனியா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 23 நனோ சுத்திகரிப்பு குடிநீர் திட்டங்களும், வவுனியா மாவட்டத்தில் 23 நனோ சுத்திகரிப்பு குடிநீர் திட்டங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 குடிநீர் திட்டங்களும் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 209 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுத்தமான குடிநீர் இல்லாது மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.அத்தோடு தீரா சிறுநீரக நோயினாலும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையினைப் போக்கிட சிறந்த செயற்றிட்டமாக நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவாட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்  காதர் மஸ்தான், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்தியானந்த, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேன, முல்லத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  ஜெயராணி, கிராம அலுவலகர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply