மருந்து உற்பத்தியில்இலங்கை  வெற்றி  – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்

மருந்து உற்பத்தியில்இலங்கை வெற்றி – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்

  • local
  • January 2, 2026
  • No Comment
  • 29

இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனம், 2025 ஆம் ஆண்டில் தமது வரலாற்றில் அதிகளவான மருந்துகளை உற்பத்தி செய்து வெற்றி கண்டுள்ளது .

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 3,625 மில்லியன் மாத்திரைகள் கூட்டுத்தானம் உற்பத்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வரலாற்றில் முதல் முறையாக, மருத்துவ விநியோகப் பிரிவால் வழங்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் எந்த பற்றாக்குறையும் இல்லாமல் வழங்க முடிந்ததாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2025 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபனம் ஐந்து புதிய மருந்து தயாரிப்புகளையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாய்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…