தேசிய வெசாக் வாரம் நாளை ஆரம்பம்

தேசிய வெசாக் வாரம் நாளை ஆரம்பம்

  • local
  • May 9, 2025
  • No Comment
  • 50

நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

நாளை(10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் நாளை(10) மாலை  நடைபெறவுள்ளது.

வெசாக் வாரத்தில் 3 நாட்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள இறைச்சி, மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.

நுவரெலியாவில் நடைபெறும் தேசிய வெசாக் பண்டிகை மற்றும் அனுராதபுரத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக இன்று(09) முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

எதிர்வரும் 13ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…