டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

  • local
  • May 9, 2025
  • No Comment
  • 57

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர்.

இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான் ஹர்சன கெகுனுவெலவின் உத்தரவுக்கமைய இன்று காலை இடம்பெற்றது. இதன்போது குறித்த மூன்று சாட்சியாளர்களும் இரண்டு சந்தேகநபர்களையும் அடையாளம் கண்டு நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இந்தநிலையில், சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் குறித்த கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…