அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு
- world
- May 8, 2025
- No Comment
- 34
அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.
இதன்படி, சீனா மீது அதிக வரிகளை விதிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக வர்த்தக போர் நிலவி வருகிறது. இந்த பின்னணியில் பிரித்தானிய அரசாங்கம் வரியை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதன்படி, இரு நாடுகளும் தற்போது வரிகளைக் குறைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிரப்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த ஒப்பந்தமானது ஒரு பாரம்பரிய வர்த்தக ஒப்பந்தமாக இருக்காது என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.