பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதிபெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி
- local
- April 19, 2025
- No Comment
- 43
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு முன்னோடித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 200 வருடங்களாக இந்த மண்ணில் வாழ்ந்துவரும் பெருந்தோட்ட சமூகம் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்து மண்ணுக்கு உரமாகியுள்ளது.
எனவே, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று இன்னமும் பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை, அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகளாவர்.
நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு உண்டான சகல உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
எமது கைகளில் மந்திரக்கோல்கள் இல்லை எனினும், நாட்டை அனைத்து வகையிலும் முன்னேற்றுவதற்கான முயற்சிகளை எம்மால் முன்னெடுக்க முடியும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாவினை நாளாந்த அடிப்படை வேதனமாகப் பெற்றுக்கொடுப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பெருந்தோட்டங்களின் ஒரு பகுதியை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும், பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.
வழங்கப்படும் காணிகளில் பறிக்கப்படும் தேயிலையை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட பல பெருந்தோட்டங்களில் முன்னோடி வேலைத்திட்டமாக இதனை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட பல பெருந்தோட்டங்களில் முன்னோடி வேலைத்திட்டமாக இதனை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனவே, பெருந்தோட்டங்களின் பிடியிலுள்ள இந்த மக்களை அதிலிருந்து விடுவித்து, ஒரு சுதந்திர பிரஜைகளாக அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.எனவே, பெருந்தோட்டங்களின் பிடியிலுள்ள இந்த மக்களை அதிலிருந்து விடுவித்து, ஒரு சுதந்திர பிரஜைகளாக அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.