பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி
- world
- January 11, 2026
- No Comment
- 15
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர்.
பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம் ஒன்றும், ஒரு சீட் லியோன் காருக்கும்நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது .
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்தத்துடன் ஐந்து பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் இரு வாகனங்களின் சாரதிகளும் அடங்குவர் என தெரிய வந்தது.
விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையின் தீவிர விபத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.