ஆசியக்கோப்பையில் இருந்து விலகும் இந்திய அணி

ஆசியக்கோப்பையில் இருந்து விலகும் இந்திய அணி

ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ ( இந்திய கிரிக்கெட் வாரியம்) முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.

இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது.

மே 10 ஆம் தேதி மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ ( இந்திய கிரிக்கெட் வாரியம்) முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய ஆசிய கிரிக்கெட் சங்கத்தினுடைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி பொறுப்பு வகித்து வருகிறார்.

இதன் காரணமாக, ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் அனைத்து தொடர்களில் இருந்து விலகுவதாக பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Related post

19  வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் –  இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் – இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…