ஜவான் செய்த மாபெரும் வசூல் சாதனை

ஜவான் செய்த மாபெரும் வசூல் சாதனை

  • Cinema
  • October 11, 2023
  • No Comment
  • 31

ஜவான்
அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ஜவான். மாபெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது.

கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. அதே போல் ரூ. 1000 கோடியை கடந்த இதுவரை ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது ஜவான்.

வசூல் சாதனை
இந்நிலையில், ஜவான் திரைப்படம் தான் பாலிவுட் சினிமாவில் அதிகம் லாபம் கொடுத்த திரைப்படம் என்கின்றனர். இப்படத்தின் டிஜிட்டல் + சாட்டிலைட் + ம்யூசிக் உரிமைகள் மட்டுமே ரூ. 250 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில் இதன்மூலம் கிட்டத்தட்ட ரூ. 480 கோடி வரை தயாரிப்பாளருக்கு ஷேர் கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 730 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுவரை எந்த ஒரு ஹிந்தி படத்திற்கும் இவ்வளவு பெரிய வருவாய் கிடைத்தது இல்லை என கூறப்படுகிறது. ஜவான் படத்தின் மொத்த பட்ஜெட் மட்டுமே ரூ. 350 கோடி ஆகும்.

ரூ. 730 கோடியில் ரூ. 350 கோடி பட்ஜெட்டை கழித்துவிட்டால் சுமார் ரூ. 380 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்த லாபம் மூலம் பாலிவுட் திரையுலகில் புதிய சாதனையை ஷாருக்கான் – அட்லீ கூட்டணி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply